நட்பு நாம் எல்லோரையும் ஒன்றுசேர்த்து
அலுவலத்தின் தொலைவு அதை பிரிக்க முடியுமா???
நம் நட்பு, வானத்தில் இருக்கும் சூரியனுக்கே ஒரு பாடம் அல்லவா!!!
இருட்டில் கூட நிலைத்து நிற்கும்.....
-மோ. ரஷ்மி
Thursday, April 16, 2009
தேன்மலை சுற்றுலா
வணக்கம் வலைபூவில் இது எனது முதல் அனுபவம். நான் எனது நண்பர்கள் வசந்த் மற்றும் சரவணன் உடன் தேன்மலைக்கு சுற்றுலா சென்றேன். அது ஒரு நல்ல அனுபாவதை எங்களுக்கு தந்தது, ஆனால் நாங்கள் அவ்வளவு எளிதில் அங்கு செல்லவில்லை
காலையில் ஐந்து மணிக்கு பஸ் ஏறினோம் ஆறு பதினைந்துக்கு எங்களுக்கு ரயில் தென்காசியில் இருந்து நாங்கள் ரயில் நிலையத்துக்கு சரியாக ஆறு மணிக்கு சென்றோம், ஆனால்.... ரயில் புறப்படுவதோ செங்கோட்டையில் இருந்து என்பது அங்கு சென்ற பின் தான் எங்களுக்கு தெரியும் அங்கு இருந்து ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து கொண்டு செங்கோட்டை ரயில் நிலையத்தை நோக்கி புறப்படோம், நாங்கள் அங்கு செல்லும் முன் வண்டி கிளம்பி விட்டது. எங்களைபோலவே ஒரு அப்பாவும் பையனும் வந்தனர். அவர்களும் அந்த ரயிலை எதிர்பார்த்து வந்தனர் ஆனால் அது சென்றுவிடவே நாங்கள் ஐவரும் ஒன்று கூடினோம். தேன்மலைக்கு செல்லும் பஸ் பாதையில் வேலை நடப்பதாக சொன்னான் அந்த ஆடோக்காரன்... ஆனால் தமிழ்நாடு பார்டர் வரையில் சென்று விட்டால் அங்கு இருந்து கேரளா ரோட்டில் வேலை முடிந்து விட்டதாகவும், அங்கு இருந்து ஆட்களை ஏற்றி செல்ல ஜீப் போக்குவரத்து உள்ளதாகவும் அவன் சொன்னான் நாகள் ஐவரும் அவன் சொன்னதை நம்பி ஆட்டோவில் பார்டர் நூகோய் புறப்பட்டோம். சுமார் பதிமூன்று கிலோமீட்டர் தூரம் சென்ற பின் கேரளா பார்டர் வந்தது அங்கு சென்ற உடன் அங்கு இருந்த ஜீப்பை நெருங்கினோம் உள்ளே ஒரு ஆள் தூங்கிக்கொண்டு இருந்தான் அவனை எழுப்பி விசாரித்தோம் ஐந்து பேருக்கு முன்னூறு ருபாய் கேட்டான். நாங்கள் மூவர் மட்டும் தன் தேன்மலைக்கு அவர்கள் இருவரும் அதையும் தாண்டி ஒரு கிராமத்துக்கு செல்வதாக கூறினார்கள். அவனிடம் பேரம் பேசிவிட்டு புறப்பட்டோம். 

நாங்கள் சென்ற ஜீப்பை படத்தில் காணலாம்
தென்மலைக்கு சரியாக எட்டரை மணிக்கு சென்றடைந்தோம் மொத்தம் எங்கள் பிரயான செலவு நானுற்றி முப்பது ரூபாய், ஆனால் நாங்கள் சரியான நேரத்திற்கு சென்று ரயிலை பிடித்திருந்தால் வெறும் பதினைந்து ரூபாய் தான்அங்கு சென்று இயற்கை வளத்தை கண்டு மகிழ்தோம்
Subscribe to:
Posts (Atom)